×

ஒண்டிப்புலி குவாரியில் 40 அடி மட்டும் நீர் இருப்பு: விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

விருதுநகர்: ஒண்டிப்புலி குவாரியில் 40 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் விருதுநகர் நகராட்சியில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 85 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். 19 மேல்நிலை தொட்டிகள் மூலம் 108 பிரிவுகளாக குடிநீர் விநியோகம் நடக்கிறது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர், ஆனைக்குட்டம் அணை வெளிப்புற கிணறுகள் மூலம் தற்போது தலா 24 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு 6 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோடையை சமாளிக்க கை கொடுக்கும் குவாரியான 100 ஆழம், 300 அடி நீளம், 100 அகலம் உடைய ஒண்டிப்புலி குவாரியில் கடந்த ஆண்டு 80 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதேபோல் 80 அடி ஆழம் உடைய காருசேரி குவாரியில் கடந்த ஆண்டு 60 அடி தண்ணீர் இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் தற்போது ஒண்டிப்புலி குவாரியில் 40 அடியும், காருசேரியில் 25 அடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. ஏப், மே மாதங்களில் தாமிரபரணியில் நீர்வரத்து குறையும். மேலும் ஆனைக்குட்டம் அணை வெளிப்புற கிணறுகளில் நீர் மட்டம் குறையும் போது குவாரிகளில் இருப்பில் உள்ள தண்ணீர் பயன்பாட்டிற்கு எடுப்பது வழக்கம். நடப்பு ஆண்டு ஒண்டிப்புலி, காருசேரி குவாரி பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தால் தண்ணீர் இருப்பு அடிமட்டத்தில் உள்ளது. அதனால் இரு குவாரிகளில் உள்ள தண்ணீரை வைத்து 10 முதல் 20 நாட்கள் வரை மட்டும் சமாளிக்க முடியும் நிலை உள்ளதால் தாமிரபரணி நீர்வரத்தை மட்டும் நம்பி குடிநீர் தட்டுபாட்டை சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது….

The post ஒண்டிப்புலி குவாரியில் 40 அடி மட்டும் நீர் இருப்பு: விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ondipuli Quarry ,Virudhunagar ,Virudhunagar Municipality ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு